விமரிசையாக நடைபெற்ற வாலாஜாபேட்டை திரௌபதி கோயில் திருவிழா..

x

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள திரௌபதி அம்மன் ஆலய தர்மர் பட்டாபிஷேக விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டார். பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தின் 137-ஆவது ஆண்டு அக்னி வசந்த விழா, கடந்த 8-ஆம் தேதி தொடங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில், பால்குட ஊர்வலம், மகாபாரத சொற்பொழிவு, மாகாபாரத நாடகம் என தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் ஒரு பகுதியாக தர்மர் பட்டாபிஷேக அன்னதான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அன்னதானத்தை தொடங்கி வைத்த அவர், பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள், பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்