மகன் வாங்கிய கடனுக்கு அப்பாவை கடத்தி கை விரலை வெட்டிய கொடூரம்..?

x

கடலூரில், மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கை விரலை கந்து வட்டி கும்பல் வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிதம்பரத்தில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் பழனிச்சாமி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், ஆனால் கடன் கொடுத்த பழனிச்சாமி 67 லட்சம் ரூபாய் வரை கேட்டதாகவும் தெரிகிறது. இதனை தர மறுத்த மணிகண்டன் அவரது தந்தை நடராஜன் உடன் சீர்காழி பகுதியில் குடி பெயர்ந்துள்ளார். இதனை அறிந்த கந்து வட்டி கும்பல் நடராஜனை காரில் கடத்தி சென்று கை விரல்களை வெட்டியாதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கந்து வட்டி கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கந்து வட்டி கும்பல் திமுக கொடி கட்டிய காரில் இந்த கடத்தல் சம்பவத்தை அறங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்