Crocodile | Nellai | குமரியை அலறவிட்ட முதலை .. நெல்லை அணையில் விடப்பட்ட காட்சி

குமரியை அலறவிட்ட முதலை .. நெல்லை அணையில் விடப்பட்ட காட்சி

Crocodile | Nellai | குமரியை அலறவிட்ட முதலை .. நெல்லை அணையில் விடப்பட்ட காட்சி #Crocodile #Kanyakumari #Nellai குமரி மாவட்டம் கோதையாற்றில் கடந்த 7 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் காரையாறு அணையில் விடுவிக்கப்பட்டது. கடையாலுமூடு பகுதியில் வலையில் சிக்கிய முதலையை பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், சுமார் 7 முதல் 8 வயதுடைய பெண் முதலை என்பதும், சுமார் 80 கிலோ எடை கொண்டதும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து முதலை அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு அணைக்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com