கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை..! பவனை நோக்கி மக்கள் கேட்கும் கேள்வி- பரபரப்பு காட்சி
தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யானை மலைவாழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் புசனடி மலை கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் அப்பகுதியில் போதிய மருத்துவ வசதியும், வாகன வசதியும் இல்லாததால், டோலியில் படுக்க வைத்து தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள், தேர்தல் பிரசாரத்தின் போது, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் கூறிய வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story