"புள்ளைங்க தூங்காம படிச்சிருக்கும்.. நாட்டு கோழி அடிச்சு கொடுத்து.. தூங்க போடுங்க ஐயா.."
கிருஷ்ணகிரி, நீட் தேர்வு மைய வளாகத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர், பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், காவேரிப்பட்டினம் மையத்தில், குழந்தைகளை தேர்வுக்கு அனுப்பிவிட்டு தேர்வு மையத்தின் முன்பு காத்திருந்த பெற்றோர்களிடம் உதவி ஆய்வாளர் அறிவழகன், நம்பிக்கை அளிக்கும் விதமாக மைக்கில் பேசினார்.
Next Story
