கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமியை கொலை செய்த வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
4 வயது சிறுமி கொலை-வேலைக்காரப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் வேலைக்கார பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வழகறிஞர் சரவணன், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவரது வீட்டு பணிப்பெண் ஆஷா ராணி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சரவணனின் முதல் மனைவியின் 4 வயது மகள் தனது திருமணத்திற்கு தடையாக இருந்து விடுவார் என எண்ணி சிறுமியை பக்கெட் நீரில் மூழ்கடித்து ஆஷா ராணி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஆஷா ராணிக்கு ஆயுள் தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளது.
Next Story
