நிற்காமல் சென்ற கார்.. விரட்டிச் சென்று தூக்கிய போலீஸ் - படத்தை மிஞ்சிய சேஸிங்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, தடுப்புகளை மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை, சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். நிற்காமல் சென்ற காரை, காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீசார், 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, கீழ்பழந்தை என்ற இடத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் இறங்கி நின்றது. காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்ததும், வரும் வழியில் ஒரு ஆடு காரில் அடிபட்டதால் உரிமையாளருக்கு பயந்து நிற்காமல் சென்றதாகவும் கூறினார். இதையடுத்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதித்து, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story
