சென்னையில் சீறிப்பாய போகும் புல்லட் ரயில்

x

தென் மாநிலங்களில் விரைவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அமராவதி ஆகிய 4 நகரங்களை இணைக்கும் விதத்தில் புல்லட் ரயில் திட்டம் வர போவதாக கூறினார். இந்த 4 நகரங்களில் 5 கோடி பேர் வசிப்பதாக கூறிய சந்திரபாபு நாயுடு, புல்லட் ரயில் திட்டம் இங்கு செயல்பாட்டுக்கு வந்தால், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்