பேருந்து நடத்துநருக்கு நேர்ந்த கொடுமை -"10 பேர் ரத்தம் சொட்ட கொடூர தாக்குதல்"

x

சென்னையில் அரசு பேருந்து நடத்துநரை கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கி விட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருப்போரூர் முதல் பாரிமுனை செல்லும்102 X தடம் எண் அரசு பேருந்தில் நடத்துநராக மோதி என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பேருந்தின் கடைசி சர்வீஸ் முடிந்ததால் சில்லரை கேட்பதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்று உள்ளார். அங்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் நடத்துனர் மோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து எக்ஸ்பிளனேட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்