மனசாட்சி இல்லாமல் குறைமாத சிசுக்களை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற கொடூரம் -திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல்லில் குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் 2 சிசுக்களின் உடல் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள பள்ளி அருகே, மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை, தூய்மைப் பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பையை அள்ளச் சென்றனர். அப்போது, குப்பைத் தொட்டியில் குறைமாத சிசுக்கள் 2 இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுக்களை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையிலேயே குப்பைத் தொட்டியில் சிசுக்களின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் மேட்டுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com