சாலையில் நின்ற மணமக்கள்.. காரை நிறுத்தி வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை திருவொற்றியூரில் இந்தியாவிலேயே முதன் முதலாக சூரை மீன் பிடிப்பிற்கென பிரத்தியேகமாக கட்டப்பட்டிருந்த புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வழியில் ஆர்.கே.நகரை சேர்ந்த திமுக நிர்வாகி வீட்டு திருமணம் நடைபெற்றது. அவ்வழியாக வரும் முதலமைச்சரிடம் ஆசீர்வாதம் வாங்க மணமக்கள் சாலையில் காத்திருந்தனர். அவர்களை கண்டதும் காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், காரை விட்டு இறங்கி, மணமக்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஒரு கவரில் அன்பளிப்பு கொடுத்தது அங்கிருந்த மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
