Dharmapuri நிகழ்ச்சியில் காணாமல் போன சிறுவன் | கதறி அழுத தாய் | ஸ்பாட்டிலேயே கலெக்டர் கொடுத்த உறுதி

x

அரசு நிகழ்வில் மாயமான சிறுவன் - தாய்க்கு ஆறுதல் சொன்ன ஆட்சியர்

அரசு நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் காணாமல் போன நிலையில், கதறிய தாய்க்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். தர்மபுரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரம்மா என்பவரும் வீட்டுமனை பட்டா வாங்க வந்திருந்தார். தீபக் என்ற தன் மகனையும் அவர் அழைத்து வந்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கூட்டம் முடிந்த பிறகு தன் மகன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீரம்மா கதறி அழுத சம்பவம் கலங்க வைத்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சியர் சதீஷ், வீரம்மாவிடம் விசாரித்து குழந்தையை மீட்டுத் தருவதாக உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்