முந்த நினைத்த சிறுவன் - முடிந்துபோன வாழ்க்கை
நாங்குநேரி அருகே பரப்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 14 வயது சிறுவன் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 14 வயது சிறுவன் பரப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது தனக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த பைக் மீது மோதியதில் சந்தோஷ் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பேருந்தின் பின்பக்க டயர் ஏறியதில் சந்தோஷ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
