நார்த்தாமலை கோயில் காளையின் உடல் நல்லடக்கம்

x

புதுக்கோட்டையில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலின் ஜல்லிக்கட்டு காளை, வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், ஊர் பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கண்ணீருடன் ஊர்வலமாக கொண்டு சென்று, காளையின் உடலை அடக்கம் செய்தனர்.

மேள தாளங்கள் முழங்க, பெண்கள் குலவையிட்டும், கோலாட்டம் ஆடியும், பட்டாசுகள் வெடித்தும், கோயில் முன்பாக மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 25 ஆண்டுகளாக இங்கு வளர்க்கப்பட்ட இந்த காளை, பல ஜல்லிக்கட்டுகளிலும் வெற்றி பெற்று பரிசுகளை குவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்