பெட்ரோல் போட்ட சிறிது நேரத்திலேயே நின்ற பைக்.. திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி
தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ததாக புகார்
சென்னையில், பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனத்திற்கு இளைஞர் ஒருவர் போட்ட பெட்ரோலில் தண்ணீர் கலந்ததாக புகார் எழுந்துள்ளது.
கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், கார்நேஷன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் 280 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும் இருசக்கர வாகனம் பாதியிலேயே நின்றது. இதையடுத்து மெக்கானிக் ஒருவர், பெட்ரோல் டேங்க் டியூப்பை கழற்றி பார்த்தபோது அதில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்ததாகவும், இதனால் வாகனம் பழுதானதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் சந்தோஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Next Story
