Airport News | ஏர்போர்ட்டில் ஏழரை கொடுத்த இளைஞர்கள் விசாரித்ததில் வெளி வந்த பகீர் பின்னணி....
காதலிக்க மறுத்த சட்ட கல்லூரி மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஒரு தலை காதலன் உட்பட இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விமானத்தில் தாய்லாந்து செல்ல இருந்த இரு இளைஞர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், இளைஞரின் செல்போனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என ஒருவருக்கு புகைப்படத்துடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தன்ராஜ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
