பேருந்தின் பின்பக்க பாகம் உடைந்து தரையில் உரசி செல்லும் அவலம் - வைரலாகும் வீடியோ
தென்காசியில் அரசு பேருந்தின் பின்பக்க பாகம் உடைந்து,தரையில் உரசி செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க பாகம் உடைந்து தரையில் உரசிக் கொண்டே சென்றுள்ளது.இதனை கண்டு கொள்ளாமல் பேருந்து இயக்கப்பட்டுள்ளது.இது பின் வரும் வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்துமாறு அச்சத்தை உண்டாக்கியது.இதனால் பயணிகள்,வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்துகளில் உறுதி தன்மையை பராமரிக்க,போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
