Tambaram | நள்ளிரவில் மதுபோதையில் வாகனங்களை குறி வைத்து இளைஞர்கள் செய்த செயல்
நள்ளிரவில் மதுபோதையில் வாகனங்களை குறி வைத்து இளைஞர்கள் செய்த செயல்
#tambaram #thanthitv
தாம்பரம் கடப்பேரி தெற்கு குளக்கரை தெருவில் நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகளை இளைஞர்கள் சிலர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை கற்களால் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதில் சரவணன் மற்றும் இமானவேல் என்பவர்களின் கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நள்ளிரவில் மதுபோதையில் இளைஞர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
