தாயுமானவர் திட்டம் - வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கிய எம்.எல்.ஏ.கருணாநிதி
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, முதியோர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில், பல்லாவரம் அருகே உள்ள பம்மல் பகுதியில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, வீடு வீடாக சென்று முதியவர்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார். இத்திட்டத்தின் மூலம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு அவர்களது இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகிக்கப்படுகிறது.
Next Story
