அதெல்லாம் முடியாது.. நேர்ல வாங்க" - மதுரை ஆதீனத்தை நெருக்கும் போலீஸ்
மதுரை ஆதினம் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அனுமதி மறுப்பு.நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு.
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் மதுரை ஆதீனத்திற்கு காவல்துறை அறிவுறுத்தல்.
ஜூன் 30 ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில் மதுரை ஆதீனம் விசாரணைக்கு வரவில்லை.
இரு பிரிவினர் இடையே வன்முறையை கொண்டு முறையில் பேசிய வழக்கில் மதுரை ஆதினம் இன்று ஆஜராக போலீசார் சம்மன்.
மேலும் போலீசார் சார்பில் மதுரை ஆதீனத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுரை ஆதீனம் சார்பில் வீடியோ காணொளி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராவதாக காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராவதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக மதுரை ஆதீனம் இன்று சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்காக ஆக ஆஜராக வேண்டுமென போலீசார் தரப்பில் மதுரை ஆதினத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.