திருமணத்திற்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு.. தலையில் இடியாய் இறங்கிய செய்தி...

தரங்கம்பாடி அருகே வீட்டு ஜன்னலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஆயப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவரது குடும்பத்தினர் திருமண நிகழ்விற்காக கும்பகோணத்துக்கு சென்று இருந்தனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 70 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், பொறையாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com