ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.20 லட்சம் நஷ்டம்- இளைஞர் தற்கொலை
சென்னையில், ஆன்லைன் டிரேடிங்கில் 20 லட்ச ரூபாய் வரை இழந்த இளைஞர், நண்பர்களுக்கு
வாட்ஸ் அப் மூலமாக மெசேஜ் அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை சூளைமேடு பகுதியில் நண்பர்களுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பழனியைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர், ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி நண்பர்களிடம் பணம் வாங்கி முதலீடு செய்து நஷ்டம் அடைந்துள்ளார். நண்பர்கள் சொந்த ஊருக்கு சென்ற நேரத்தில், அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விடுமாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
Next Story
