`மீண்டும் ஒரு சோகம்' - தொடர்ந்து காவுவாங்கும் Online ரம்மி

மீண்டும் ஒரு சோகம்' - தொடர்ந்து காவுவாங்கும் Online ரம்மி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வசித்து வந்த திலீப் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பலரிடம் கடன் வாங்கி ஒரு லட்சம் ரூபாயை இழந்து கடன் தொல்லைக்கு ஆளாகியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட பெற்றோர் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த திலீப், விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திலீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com