வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழில் - வெளியானஅதிரவைக்கும் உண்மை

பாவூர் சத்திரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் கடையம் அடுத்த முதலியார்பட்டியில் மறைமுகமாக பாலியல் தொழில் நடத்த வந்திருக்கிறார். இதனை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்த நிலையில், கோபாலகிருஷ்ணனையும், இளம் பெண் ஒருவரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். விசாரணையில், வாட்ஸ் அப் குரூப் மூலம் இளம் பெண்களை வைத்து கோபாலகிருஷ்ணன் பாலியல் தொழில் நடத்தி வந்ததை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில், கோபால கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மீட்கப்பட்ட இளம் பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com