தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஹை அலர்ட்... களத்தில் இறங்கிய பேரிடர் மீட்பு படை

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், மழையின் நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது உதவிகள் கேட்கும் பட்சத்தில் அதன் மீதும் நடவடிக்கை எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

X

Thanthi TV
www.thanthitv.com