ஊட்டியில் பூத்த DISNEY WORLD - உற்சாகத்தில் மக்கள்

ஊட்டியில் பூத்த DISNEY WORLD - உற்சாகத்தில் மக்கள்
Published on

உதகை அரசு தாவரவியல் பூங்காவின் நுழைவாயிலில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு 126வது மலர்க்கண்காட்சி என்ற பெயர் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சம் மலர்களாலான டிஸ்னி வேர்ல்டு மற்றும் 80 ஆயிரம் மலர்களாலான உதகை மலை ரயில் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த பிரமாண்ட கண்காட்சியைக் காண காலை முதலே கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட உள் மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com