12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் - கோவையை உலுக்கிய 3 மாணவர்கள் மரணம்

திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த தீத்திபாளையம் அரசுப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்களான பிரவீன், கவின், தக்க்ஷன், சஞ்சய் ஆகிய 4 பேரும் தொண்டாமுத்தூர் அருகே முண்டந்துறை தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். 40 அடி ஆழமுள்ள தடுப்பணையில் தற்போது 15 அடி அளவில் நீர் உள்ளது. இதில், நீச்சல் தெரியாத பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சஞ்சய் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர், நீரில் மூழ்கிய மூவரது உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com