"20 வருடம் முன் நடந்தது இப்போ நடக்குது..."பீதியில் உறைந்து நிற்கும் சேலம் மக்கள்

சேலம் மாவட்டம் ஏற்காடு, குப்பனூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ஓமலூர், கருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மதியம் 1 மணியளவில் வெடி வெடிப்பது போன்று சத்தம் கேட்டது . இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வாக இருக்குமோ சந்தேகம் எழுந்தது. ஆனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

Thanthi TV
www.thanthitv.com