"Pothys Saree Day" மற்றும் வாக்கத்தான் - ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்

நம் மண்ணின் நேர்த்தியான கலை அடையாளத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சேலையை கவுரவிக்கும் வகையில் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து போத்தீஸ் Saree day என்ற ஹேஷ்டேக் போட்டியை அறிவித்திருந்தனர்... சேலை அணிந்து வித்தியாசமான ரீல்ஸ்கள், புகைப்படங்கள் எடுத்து ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வமாக தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து போட்டியில் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கிஃப்ட் வவுச்சர்களை பரிசாக வழங்கினார். அத்துடன் மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் போத்தீஸ் சேலை தின இன்டெர் காலேஜ் ஃபெஸ்ட்டை ஒட்டி வாக்கத்தான் நடைபெற்றது... இதில் 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சேலை அணிந்து வலம் வந்தனர்... சிறப்பு விருந்தினர் சனம் ஷெட்டியும் இதில் பங்கேற்றார். போட்டியின் இடையே அனைவரும் சினிமா பாடல்களுக்கு அசத்தலாக நடனமும் ஆடி மகிழ்ந்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com