7,000 சடலங்களை சுமந்த 76 வயது மாமனிதர் "5 பெண் பிள்ளை... இருந்தும் மக்களுக்காகவே இந்த உயிர்"

x

7,000 சடலங்களை சுமந்த 76 வயது மாமனிதர்

"5 பெண் பிள்ளைகள்... இருந்தும் மக்களுக்காகவே இந்த உயிர்"

கேவலமா பார்த்த இதே மண்ணில் இன்று பாராட்டு

ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர்களின் பிணங்களை அடக்கம் செய்து வரும் ஒரு மாமனிதர் குறித்த ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

எங்கு திரும்பினாலும் பட்டங்கள்... விருதுகளாக காட்சியளிக்கிறது ஆலங்குடி 515 கணேசன் வீடு...

படித்தது 8 ஆம் வகுப்பே என்றிருக்க, அவரது வீட்டில் குவிந்திருக்கும் இந்த பட்டங்கள் எல்லாம் மனிதம் போற்றும் அவரது சமூகசேவையை பாராட்டி வழங்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை கார் கிடைப்பதே கடினம். அதுவும் பெரும்பாலும் இறந்தவர்கள் சடலங்களை ஏற்றிச் செல்லாது.

அப்படி தவித்த ஏழை மக்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தது 515 கணேசன்...

அது என்ன? 515 கணேசன் என்றால், அவரது கார் எண்தான் அவரது அடைமொழி பெயராக ஒட்டிக்கொண்டது.

அன்றிலிருந்து ஆதரவற்றோர் சடலங்களை தானே தூக்கிச் சுமந்து காரில் ஏற்றி அடக்கம் செய்து வருகிறார்.

என்ன கஷ்டம், எந்த நேரமாக இருந்தாலும் பிறருக்கு உதவி

விபத்தில் சிக்கியவர்கள், அவசரச் சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு எல்லாம் தன்னலமின்றி உதவியவர்.

அந்த மாபெரும் உதவியே அவரை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

5 பெண் குழந்தைகளை பெற்றாலும், வாழ்வாதாரம் என்னவாகும் என யோசிக்காமல், காசு இன்னைக்கு வரும்... நாளைக்கு போகும்... என சொல்லி உதவியவர் 515 கணேசன்.

2018-ல் கஜா புயலில் தன் வீட்டை பற்றி கவலைப்படாமல் பிறருக்கு உதவி செய்ய ஓடியவர். அப்போது அவருக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்தது நடிகர் ராகவா லாரன்ஸ்.

இப்போதும் பழைய இரும்பு வாங்கி விற்கும் கணேசன், சொற்ப வருமானமே கிடைத்தாலும், உதவி செய்வதை நிறுத்தவில்லை..

7,000-க்கும் மேற்பட்ட சடலங்களை ஏற்றி உதவியவர் சேவையை பாராட்டியே பல்கலைக்கழகங்கள் கெளரவ பட்டம் வழங்கி கெளரவித்து உள்ளனர்.

3 கார்களில் 2 கார்கள் பழுதாகிவிட ஒரு காரை மட்டும் இயக்கிவரும் கணேசன், சொற்ப வருமானம் என்றாலும் என் உதவி தொடரும் என்கிறார் 515 கணேசன்.

76 வயதிலும் ஓய்வில்லாமல் உழைக்கும் கணேசனிடம், உங்க சுறுசுறுப்பின் ரகசியம் கேட்டால் எல்லம் நான் செய்த புண்ணியம் என கடக்கிறார்...

தன்னலம் இல்லாது பிறருக்கு உதவிசெய்யும் 515 கணேசன், ஒரு மாமனிதராகவே உயர்ந்து நிற்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்