வரலாற்றில் இன்று : முதன்முதலாக ஆட்சி அமைத்தது திமுக... தாகூரை சந்தித்தார் காந்தி

x

1475

மைக்கலாஞ்சலோ பிறந்த தினம்

புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரும் சிற்பியுமான மைக்கலாஞ்சலோ மார்ச் 6ம் தேதி 1475ம் ஆண்டு அரெஸ்சோ மாகாணத்தில் காப்ரெஸ் எனும் ஊரில் பிறந்தார்...

1869

முதல் தனிம வரிசை அட்டவணை சமர்ப்பிப்பு

1869ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி நடந்த ரஷ்ய வேதியியல் சங்கத்தின் கூட்டத்தில், ரஷ்ய வேதியியலாளர் டிமிட்ரி மெண்டலீவ் முதல் தனிம வரிசை அட்டவணையை சமர்ப்பித்தார்...

1915

தாகூரை காந்தி முதன்முதலாக சந்தித்த தினம்

1915ம் ஆண்டு மகாத்மா காந்தி முதல் முறையாக ரவீந்திரநாத் தாகூரை மேற்கு வங்கம் சாந்திநிகேதனில் சந்தித்த தினம் இன்று...

1957

கானா விடுதலை பெற்ற நாள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா 1957ம் ஆண்டு பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றது இதே நாளில் தான்...

1960

நகராட்சித் தேர்தல் - பெண்களுக்கு வாக்குரிமை

சுவிட்சர்லாந்து அரசு நகராட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது 1960ம் ஆண்டு மார்ச் 6ல் தான்...

1964

முகமது அலியாக மாறிய காசியஸ் கிளே

1964ம் ஆண்டு அமெரிக்க குத்துச் சண்டை வீரர் காசியஸ் கிளே தனது ஆன்மீக வழிகாட்டியான எலியா முகமதுவால் வழங்கப்பட்ட முகமது அலி என்ற பெயரை ஏற்றுக் கொண்டது இதே தினத்தில் தான்...

1967

திமுக முதன்முதலில் ஆட்சி அமைத்த நாள்

1967ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று... இந்திய தேர்தல் வரலாற்றில் மாநில கட்சி முதன்முறையாக ஆட்சியமைத்ததும் அப்போதுதான்...


Next Story

மேலும் செய்திகள்