எனக்கு முதலமைச்சரை தெரியும் - ஆனா அவருக்கு என்ன தெரியாது - பொய்களை நம்பி ஏமாந்துபோன அப்பாவி

எனக்கு முதலமைச்சரை தெரியும் - ஆனா அவருக்கு என்ன தெரியாது - பொய்களை நம்பி ஏமாந்துபோன அப்பாவி
Published on

கடலூர் மாவட்டம், லால்பேட்டையை சேர்ந்த அப்துல் அஜீது என்பவர், கடந்த 30 ஆண்டுகாலம் அபுதாபுயில் பணி செய்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், கும்பகோணம் சோழபுரம் கிராமத்தை சேர்ந்த முகமது சுகைல் என்பவரிடம் இரண்டரை கோடி பணத்தை இழந்துள்ளார். முதலமைச்சர் குடும்பத்தை தனக்கு தெரியும் என்றும், பயறு வகைகளை லூலூ மாலுக்கு ஏற்றுமதி செய்தால் 40 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று கூறியும் பணம் பெற்றதாக அப்துல் அஜித் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முகமது சுஹைல் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறியுள்ள அவர், தன்னிடம் ஏமாற்றிய பணத்தை திரும்ப பெற்று தரும்படி போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com