கடன் வசூலிக்க வந்தவருக்கு கடனை கடனை கொடுக்காமல் நாய்க்கடி | கோவையை நடுங்கவிட்ட வீடியோ
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தர்ஷனா தம்பதியினரிடம் காரை பறிமுதல் செய்ய வந்த
தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வளர்ப்பு நாயை விட்டு கடிக்க வைத்தாக தர்ஷினியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தர்ஷனா நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்தபோது நாயை விட்டு மிரட்டியதாகவும் ,விட்டால் கடித்து கொதறிவிடும் என ஊழியர்களை எச்சரிக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மேலும் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் 12 இடங்கள் வரைக்கும் கடித்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தர்ஷனா தரப்பினர் நிதி நிறுவனத்தினர் முறையான ஆவணங்களை கொடுக்கவில்லை எனவும் காரில் காண நம்பர் பிளேட்டை முடிவு செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்திருந்த சூழலில் தனியார் நிதி நிறுவனத்தினர் பதிவு செய்த செல்போன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் நடப்பதும் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய் அவர்களை கடிக்க பாய்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்ஷனாவை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது..
