#JUSTIN || நிவாரணத் தொகை..கடலூர் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி | Cuddalore | Tamilnadu

x

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு 2000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் இந்தப் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

பல்வேறு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் இந்த தொகையினை வாங்கி வருகின்றனர்.

நேற்று வரை ரேஷன் கார்டுகளை காண்பித்து டோக்கனை கொடுத்து பணத்தை பெற்று வந்தனர்.

இன்று முதல் இந்த தொகையை வழங்குவதற்கு கைரேகை வைக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக பல்வேறு இடங்களிலும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பல மணி நேரமாக காத்திருக்கின்றனர்.

பல்வேறு இடங்களிலும் சர்வர் வேலை செய்யாத காரணத்தினாலும் மற்றும் கைரேகை வைத்து ஒவ்வொருவருக்காக பணம் வழங்குவதாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் 2000 ரூபாய் வழங்கும் பணி காலதாமதமாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் இதற்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு இடங்களிலும் காத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்