கோடியில் மிதந்த தாய், மகள் - வெளிச்சத்திற்கு வந்த பிளான் - நீதிபதி போட்ட உத்தரவு

x

மலேசிய நிறுவனத்திற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி, 10.5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான தமிழரசி மற்றும் அவருடைய தாயாரை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வரும் அவர்கள், மலேசியாவில் உள்ள நிறுவனத்திற்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி மோசடி செய்துள்ளனர். அவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்