மின் கம்பி மீது உரசிய பேருந்து - துடி துடித்து இறந்த ஓட்டுநர் - நீலகிரியை உறைய வைத்த பகீர் சம்பவம்

நீலகிரி மாவட்டம் கோவில்மட்டம் அருகே அரசு பேருந்து சென்ற போது, சாலையில் தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகள் மீது பேருந்து உரசியதில் ஓட்டுநர் பிரதீப், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மின் இணைப்பை துண்டித்து, ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல், காற்றுடன் கூடிய மழை பொழிவு காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com