`ஆருத்ரா மோசடி' - தலைமறைவான Crime Couple ... ஜோடியாக சிக்கிய பரிதாபம்

முதலீடு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி, வாடிக்கையாளர்களின் பணம் சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி செய்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், சென்னை, ஆவடியில் கிளை நிறுவனம் தொடங்கிய அருண்குமார் - ஜெனோவா தம்பதி, 8 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 134 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. இந்நிலையில், தம்பதியின் சொத்துக்கள் மற்றும் ஐந்து வங்கி கணக்குகளை முடக்கிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்திருக்கின்றனர். இதனிடையே, ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களின் ஒருவரான ரூசோவை, போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி தேடி வந்த நிலையில், அவரையும் கைது செய்திருக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com