செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி மாணவர் விபரீதம்

x

மதுரையில் கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியவில்லை எனக்கூறி மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளமாறன் தனது பாட்டி வீட்டில் தங்கி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த முடியாததால் இளமாறன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்