ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி

x

ஐதராபாத்திற்கு கல்வி சுற்றுலா சென்ற கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நையுமு ரஷித் என்ற மாணவன் உள்பட 11 மாணவர்களை 2 ஆசிரியர்கள் கேரளாவில் இருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் கல்வி சுற்றுலா அழைத்து சென்றனர். அப்போது ஓமலூர் அருகே மாணவன் நையுமு ரஷீத் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்