கடன் தொல்லையால் தற்கொலை செய்த குடும்பம்
சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியில், கடன் பிரச்சனையால் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்ராஜ், ரேகா தம்பதியினர் தங்களது 15 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் 3 பேரும் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மூவரின் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
