நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த பெண் தற்கொலை
பண்ருட்டி அருகே பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் சுபாஷினிக்கும், எம்.புதூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதற்காக பெற்றோர் அழைப்பிதழ் வைக்க வெளியூர் சென்று திரும்பிய நிலையில், சுபாஷினி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுபாஷினியின் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
