தந்தி டிவி செய்தி எதிரொலி.. உடனே களத்திற்கு வந்து பள்ளியை கண்டித்த அதிகாரிகள்

x

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தையை, பள்ளியில் இருந்து நீக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து தந்தி செய்தி தொலைக்காட்சியில், செய்தி வெளியான நிலையில்,தனியார் பள்ளி இயக்க மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் குழந்தைகள் நல அலுவலர் சந்தியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை அதிகாரிகள் கண்டித்த நிலையில், மீண்டும் குழந்தையை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர். ஆனால் குழந்தையின் பெற்றோர், மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என மறுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்