தந்தி டிவி செய்தி எதிரொலி - புதிய பேருந்து இயக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
வேப்பனஹள்ளியில் அரசு நகர பேருந்தில் மழை நீர் கொட்டியது குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், புதிய பேருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகரிலிருந்து வேப்பனஹள்ளி வழியாக விருப்பச்சந்திரம் கிராமத்திற்கு 48 என்ற எண் கொண்ட நகர பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப்பேருந்து பயணிகளுடன் சென்றபோது, கனமழை பெய்ததால் பேருந்தின் மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இது தொடர்பாக தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில் இந்த வழித்தடத்தில் பழைய பேருந்துக்கு மாற்றாக புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story