Thanthi TV 15th Anniversary | 15ம் ஆண்டில் தந்தி டிவி.. மனதார வாழ்த்திய ராகுல்

15ம் ஆண்டில் தந்தி டிவி.. மனதார வாழ்த்திய ராகுல்

``நம்பகமான குரலாக ஒலிக்கும் தந்தி டிவி’’ - 15ம் ஆண்டில் தந்தி டிவி.. மனதார வாழ்த்திய ராகுல்

தந்தி தொலைக்காட்சி தனது 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்... ராகுல் காந்தி தனது வாழ்த்துக் குறிப்பில், இந்திய அளவிலும் உலக அளவிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கள நிலவரத்தில் கவனம் செலுத்தி மக்களின் குரலை உரக்க ஒலிக்கும் செய்திகள் முன்னெப்போதையும் விட தேவைப்படும் சூழலில்,,, தந்தி டிவி நம்பகமான குரலாக திகழ்வதாக பாராட்டியுள்ளார்... மேலும்,பொதுமக்களுக்கு தொடர்ந்து தங்கு தடையின்றி செய்திகளை வழங்கும் தந்தி டிவியை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. அத்துடன் தந்தி டிவி தனது புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதோடு... பல வெற்றிகரமான மைல் கற்களை அடைய வாழ்த்துகள் என ராகுல் காந்தி மனமாற பாராட்டியுள்ளார்.

X