

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஜெய்பிரபு என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.9 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில்,தமிழ்கலாச்சாரங்கள் குறித்த பாடத்தை மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமாக கற்று கொடுப்பது என அவர் முடிவெடுத்துள்ளார்.அதன்படி,முதலில் வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டு முறையில்,திரையில்,கலைகள் குறித்த வீடியோக்களை ஒளிபரப்பிய அவர் பின்னர் மாணவர்களையும் கலைகளை செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்.அதன் விளைவாக, தற்போது,மாணவ மாணவிகள் சிலம்பம்,நாதஸ்வரம், பறையாட்டம் என அசத்தி வருகின்றனர்.