

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூரில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், 22 லட்சம் ரூபாய் தப்பியுள்ளது. கடைவீதியில் இருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து, அதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில், இயத்திரத்தை முழுமையாக உடைக்க முடியாமல், மர்மநபர்கள் விட்டுச் சென்றது தெரியவந்தது. இதனால், அதிலிருந்த 22 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.