கடன் வசூல்... வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை நாசம் செய்த மிருகம் - தஞ்சை அருகே அதிர்ச்சி
தஞ்சை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தனியார் நிதி நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கரந்தையை சேர்ந்த சண்முகராஜ், தனியார் நிதி நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், செல்போனுக்கு வாங்கிய கடன்தொகையை வசூலிக்க சென்ற வீட்டில், தனியாக இருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சண்முகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
