திருபுவனம் பட்டுச்சேலைக்கு அங்கீகாரம் : மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
திருபுவனம் பட்டுச்சேலைக்கு அங்கீகாரம் : மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது
Published on
தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது... இனிமேல் நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவே போலியான புடவைகளை திருபுவனம் பட்டுப் புடவை என்று யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். 5 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின் திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அவர் கு றிப்பிட்டார். தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு ஆகியவற்றிற்கு ஏற்கனவே அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது
X

Thanthi TV
www.thanthitv.com