Thanjavur Temple | மூவர்ண கொடியாக ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில் - கண்கொள்ளா காட்சி
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தஞ்சை பெரிய கோயில் மூவர்ண கொடியின் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மூவர்ண கொடியை விளக்குகளால் உருவாக்கியுள்ளது தொல்லியல் துறை. ராஜராஜ நுழைவாயில் இடதுபுறம் மூவர்ண விளக்குகளால் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ளது, இதனை ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு புகைப்படமும் எடுத்துச் சென்றனர்.
