தஞ்சை : அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை - நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3000 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.
தஞ்சை : அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை - நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
Published on
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3000 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. தஞ்சை மாவட்டத்தின், அணைக்கரை, வெட்டிக்காடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தது. இதன் காரணமாக துறையுண்டார்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர், நல்லவன்னியன்குடிகாடு, சித்திரக்குடி, சக்கரசாமந்தம், களிமேடு, கள்ளப்பெரம்பூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கிராமங்களில் 3000 ற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. நல்லவன்னியன் குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால், இளம் பயிர்களும், நடவு செய்த ஒரு மாதத்துக்கு மேலான பயிர்களும் தண்ணீரில் முழ்கின.
X

Thanthi TV
www.thanthitv.com